Tuesday, February 23, 2010

காஷ்மீரில் 10 நாள் குழந்தை கொலை ; யார் பொறுப்பு ? சட்டசபையில் அமளி


ஸ்ரீநகர்: மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய கும்பல் ஒன்று தாயின் அரவணைப்பில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட போது வன்முறைக்கும்பலால் 10 நாள் வயது குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது. அங்கு சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதையே இது காட்டுகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த நிஷார்அகம்மது குல்சுமா தம்பதியினரின் மகன் இர்பான் அகமது ( வயது 10 நாள் ) . இந்தக்குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது தொடர்பாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஒரு காரில் புறப்பட்டுள்ளார். பஸ் சென்று கொண்டிருந்தபோது ஒரு வன்முறைக்கும்பல் பஸ்கள் மீது கல் வீசித்தாக்கியது.

பின்னர் காரில் பயணம் செய்த பயணிகள் சிலரை  கீழே இறக்கி போட்டு அடித்துள்ளனர். இதில் தனது குழந்தையை தனது உடலோடு இணைத்து காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அந்த வன்முறைக்கும்பல் தாக்கியதில் குழந்தை மீது அடி விழுந்தது. இதில் குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் பீறிட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அங்கு குழந்தை இர்பான் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் துக்கம் தாங்காமால் தாய் குல்சுமா அழுது துடித்தார்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், மனித உரிமை மீறல் நடந்ததாகவும் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் குழந்தை கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்: 10  நாள் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் எதிரொலித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுன. ஜனநாயக மக்கள் கட்சியினர் கடும் கூச்சலிட்டனர். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முழுமையாக கெட்டு போய்விட்டது. என கோஷம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கை நோக்கி செல்ல முற்பட்டனர். இவர்களை தடுப்பு காவலர்கள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

 இது குறித்து எதிர்கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில் ; மாநிலத்தில் நடந்துள்ள குழந்தை பலிக்கு அரசே காரணம்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உமர் அப்துல்லா , குழந்தையை கொலை செய்தவர்களுக்கு எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என கூறியுள்ளார்.

சீக்கியர்கள் கொலைக்கு எதிர்ப்பு : பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ வைப்பு சம்பவமும் நடந்தது. சீக்கிய அமைப்பினர் பல இடங்களில் தலிபானுக்கு எதிரான வாசகம் அடங்கிய பேனருடன் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் வடக்கு காஷ்மீர் பகுதியில் சாப்பூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் இருவரை பிடிக்க துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment