மதுரை, பிப். 22-
மதுரை காந்தி மியூசியத்தில் பாடகர் டி.எம்.சவுந்திரராஜன் ரசிகர் மன்றம் சார்பில் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்னிசை நிகழ்ச்சியில் பாடகர் டி.எம்.சவுந்திரராஜன், மகன்கள் பாலராஜன், செல்வக்குமார் கலந்து கொண்டு பாடினர். 3 பேரும் பழைய பாடல்களை பாடினார்கள். இதை ரசிகர்கள் ஆர்வத்தோடு ரசித்து கேட்டு மகிழ்ந்தனர்.
முன்னதாக டி.எம்.சவுந்திரராஜன் பேசியதாவது:-
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலகுறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தேன். மீன்ட்சி அம்மன் அருளாலும், முருகபெருமான் அருளாலும் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். எமனுடன் போராடி மீண்டு வந்துள்ள நான் இன்று உங்கள் முன் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பளித் இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு ஊரின் தெருக்களிலும் நான் பாடிய பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதைக்கேட்கும் போது எனக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்து வருகிறது. என் மூச்சு உள்ளவரை நான் பாடிக்கொண்டே இருப்பேன்.
சிகாகோ நகரில் நான் பாடிய பாடலின் ராகத்தை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆராய்சசி முடிவில் செடி, கொடிகள் கூட மயங்கி உற்சாக மடைந்ததாக சொல்கிறார்கள். நான் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி இருந்தாலும், பக்தி பாடல்கள் மட்டும் 2 ஆயிரம் பாடல்கள் பாடிஉள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழச்சியில் மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் சேதுராமன், முன்னாள் எம்.பி. ராம் பாபு உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனதர்ர்.
No comments:
Post a Comment