Thursday, February 18, 2010

Avatar - டெக்னாலஜி 04

Simul-Cam : வர்ச்சுவல் கேமராவை வைத்து, ஏற்கனவே எடுத்தக் காட்சிகளை டைரக்டர்-பாய்ண்ட் ஆஃப் வ்யூவில் பார்த்துக் கொண்டிருந்த கேமரனுக்கு திடீரென ஒரு ஐடியா. ‘வர்ச்சுவல் கேமரா... வெறும் மானிட்டர். அந்த மானிட்டரோடு, வின்ஸ்-கேமரன் ஃப்யூஸன் 3டி கேமராவையும் இணைத்தால் என்னவென்று தோன்றிய பொழுது, உருவானதுதான்... இந்த சிமுல்-கேம் (முதல் பதிவில் பார்த்த வின்ஸ்-கேமரன் ஃப்யூஸன் 3டி கேமரா இன்னும் நினைவிருக்கா?).

ஃப்யூஷன் 3டி கேமராவுடனும், செட்டில் இருக்கும் மற்ற நூத்துக் கணக்கான கேமராவுடனும் இதை இணைச்சி, கூடவே... சிஜிஐ கேரக்டர்களின் உலகத்தையும், இதோடு இணைத்து விட்டார்.

அதாவது, இனிமேல்... தனித்தனியாக நடிகர்களை நடிக்க வைத்து, அவர்களை ‘சிஜி செட்டில்’ ஏற்றி, அதன் பிறகு ஏற்கனவே எடுத்தக் காட்சிகளை, வர்ச்சுவல் கேமராவில் டைரக்ட் செய்யாமல், லைவாக.... நடிகர்கள் நடிக்கும் போதே... அவர்களின் ‘சிஜி கேரக்டர்களின்’ பர்ஃபார்மென்ஸை, அந்த வர்ச்சுவல் உலகத்தில் பார்ப்பது.

இதன் விளைவு? கேமரன் செய்ய வேண்டியது எல்லாம்... இந்த மானிட்டர்/கேமராவை, நடிகர்களை நோக்கிப் பிடித்தால்..., கை கால்களை ஆட்டிக் கொண்டிருக்கும் நடிகர்கள்.. இம்மீடியட்டாக... பேண்டோராவில் நா’விக்களாக தெரிய ஆரம்பிப்பார்கள். (படத்தில்.. தலீவரும்... சிமுல்-கேமும்).

இனிமேல்... காட்சியில் எதாவது பிரச்சனையிருந்தால், ரீஷூட் செய்யத் தேவையிருக்காது. பிரச்சனையை, அப்பொழுதே கண்டுபிடிக்கலாம். தேவையெனில் ‘ரீடேக்’ மட்டும் போதும்.

வர்ச்சுவல் கேமராவை, ஸ்பீகல்பர்க்கும், ஜார்ஜ் லூகஸும் இவருக்கு அறிமுகப் படுத்தினா... அந்த வர்ச்சுவல் கேமராவை வைத்து இவர் உருவாக்கின, சிமுல் கேம்மை... இப்ப... இவர் அவங்களுக்கே அறிமுகப் படுத்தியிருக்கார்.

செட்டிற்கு வந்து பார்க்காத பெரிய தலைகளே இல்லை. ராபர்ட் ஸெமிக்ஸ், ரோலண்ட், ஸ்டீவன் ஸ்பீகல்பர்க், ஜார்ஜ் லூகஸ், மைக்கெல் பே ... அப்புறம் பீட்டர் ஜாக்ஸன். ஹாலிவுட்டின் டெக்னாலஜியையும், பட்ஜெட்டையும்... எப்பவும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துகிட்டுப் போறது..... இந்த ஏழு பேர் கூட்டணிதான்!!!



நமக்கு... டெக்னாலஜிக்காக பத்து வருடம் பொறுத்திருந்த கேமரனைத் தெரியும். 20 வருஷமாஸ்டீவன் ஸ்பீகல்பர்க்கைTINTIN என்ற காமிக் கதாப் பாத்திரத்தின் உரிமையை, ஸ்டீவன் வாங்கி வச்சிட்டார். ஏற்கனவே அந்த பாத்திரத்தை வச்சி, சிலப் படங்கள் வந்திருக்கு. ஆனா அந்த பாத்திரத்தின் உரிமையாளரான Hergé -க்கு பிடிக்காம, கடைசியில் ஸ்டீவன் கையில் வந்திருக்கு.

அந்தப் பாத்திரத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்க, லைவ் ஆக்‌ஷனா அல்லது அனிமேஷனான்னு அத்தனை வருடங்களாக தடுமாறி, மாறி மாறி அறிக்கை விட்டுகிட்டு இருந்த ஸ்டீவனுக்கு, கண்ணை திறந்து விட்டது... அந்த ‘அவதார் செட் விஸிட்’ -தான்.

பீட்டர் ஜாக்ஸன் கையிலும், ஸ்டீவன் கையிலும் இந்த சிமுல் கேமை ஜிம் கொடுக்க, குழந்தைங்க மாதிரி செட்டை சுத்தி சுத்தி வந்தாங்களாம். அப்பதான்... TINTIN - ஐ சரியான முறையில் கொண்டு சேர்க்கும் டெக்னாஜி.. இந்த சிமுல்-கேம்தான்னு முடிவு பண்ணியிருக்காங்க.

TINTIN -  இப்போதைக்கு இரண்டு பாகங்களாக வெளிவரப் போகுது. முதல் பாகத்தை பீட்டர் ஜாக்ஸன் தயாரிக்க, ஸ்டீவன் இயக்கிகிட்டு இருக்கார். படம் வெளி வரப்போவது, இந்தியாவில் நவம்பர் 2011. எங்க ஊரில் லேட்டாதான் வருது. டிஸம்பர் 2011!!! அவதார் பதிவு மாதிரி இதுக்கும் டெக்னாலஜியை எழுதி ஒப்பேத்த வேண்டியதுதான் (இப்பவே ரெடி ஆய்ட்டேன் பார்த்தீங்களா).

இரண்டாம் பாகத்தை, ஸ்டீவன் தயாரிக்க... பீட்டர் ஜாக்ஸன் இயக்குறார். தயாரிப்பாளர் கிடைத்தால்..... மூன்றாம் பாகத்தை, இரண்டு பேரும் சேர்ந்து இயக்கப் போறாங்களாம். அது 2015- பக்கமா இருக்கலாம்... 2012-ல் உலகம் அழியாம இருந்தா!!! இரண்டுப் படங்களும், அவதார் உபயோகித்த அதே டெக்னாலஜிக்களை உபயோகிச்சித்தான் வெளி வரப் போகுது.

இந்த சிமுல்-கேம், ஜஸ்ட் லைக் தட்- மாதிரியெல்லாம் வந்துடலை. ஹெட் ரிக்கிற்கு, ஒரு வருடம் பிடிச்சதுன்னா, சிமுல்-கேமிற்கு எத்தனை நாட்கள் பிடிச்சிருக்கும்னு யோசிச்சிப் பாருங்க. கீழே ஒரு வீடியோ இருக்கு. கேமரனின் 27 நிமிட பேட்டி. அவதார் காட்சிகள் எதுவும் இருக்காது. ஆனா... அந்த வீடியோ முழுக்க, இன்ஃபர்மேஷன்... மட்டும்தான். இந்த ஒவ்வொரு ப்ராஸஸுக்கும், இவர்கள் எடுத்துக் கொண்ட உழைப்பும், கஷ்டங்களும், வெற்றிகளும்... எத்தனை பேரின் உழைப்பையும், நேரத்தையும் எடுத்திருக்குன்னு தெரியும்.

இந்தத் தொடரின் சிலப் பகுதிகளை சுட்டது அங்கிருந்துதான். முழுசா படிச்சிட்டு, மொதல்ல ஓட்டு போட்டுட்டு அப்பாலிக்கா.. வீடியோக்களை பாருங்க. ஒன்னியும் அவசரம் இல்ல.
காத்துக் கொண்டிருந்த தெரியுமா? 1983 -லேயே
தொழில்நுட்பங்கள் இத்தனை வளர்ந்த பின்னும், அதை இனிமேல் கண்டுபிடிக்கக்கூட வேணாம். அட்லீஸ்ட், அதை கத்துகிட்டாவது, நம்மூரில் 18-20 கோடிகளில் படம் எடுப்பவர்கள், கொஞ்சமாவது முயற்சி செஞ்சா பரவாயில்லை. இந்த விஷயத்தில் நான் எதிர்பார்த்திருப்பது, எந்திரனையும், சுல்த்தானையும்தான். அது எவ்வளவு மோசமாயிருந்தாலும், கைதட்டி வரவேற்பதுன்னு முடிவில் இருக்கேன்.

பொங்கலுக்கு வரப்போற ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஏகப்பட்ட பாம்புகள் வரும் காட்சியை, விஷுவல் எஃபெக்ட் கன்சல்டண்ட் மாதிரி ஒருத்தரை செட்டில் வைத்து, எப்படி எடுக்கலாம்னு முதல்லயே டிஸ்கஸ் பண்ணாம, காட்சியை எடுத்துட்டு, அப்புறமா விஷுவல் பண்ணப் பார்த்தாங்களாமே. இந்த லட்சணத்தில், ‘ஹாலிவுட் பிச்சை வாங்கணும்’னு வைரமுத்து வேற ஸ்டேட்மெண்ட் கொடுக்கறாரு. ஒருவேளை... Fபீப்.., Fபீப்...-ன்னு சவுண்டு கொடுத்தால்... அதுதான் ஹாலிவுட்டுன்னு நினைச்சிகிட்டாரோ?

ட்ரெய்லரைப் பார்த்தாலே... தெரியுது. கிங்காங், ஸ்னேக்ஸ் ஆன் எ ப்ளேன்சீனப் படங்களில் இருந்து, டெலி’பேதி மூலமா காட்சிகளை ரிசீவ் செய்த லட்சணம். க்ராஃபிக்ஸ்??? கொடுமைடா சாமீ..!!! ‘எங்க பேரை’ யூஸ் பண்ணாதீங்க சார்ர்ர்ர்’-ன்னு வேணும்னா.. ‘பிச்சை’ எடுக்கலாம்.

நம்மைப்போல திரைத்துறைக்கு சம்பந்தமேயில்லாத ஆட்கள் கூட, அதிலுள்ள புது தொழில்நுட்பங்கள் மேல் ஆர்வமாயிருக்கும் போது, அதையெல்லாம் விட்டுட்டு, ஜாக்கிச்சானை வைத்து ஆடியோ வெளியிட்டு, விழாவுக்கு வந்த நடிகை, குட்டைப் பாவடை போட்டிருந்தாங்களா, உள்ள ஜட்டி போட்டிருந்தாங்களா-ன்னு டெஸ்ட் பண்ணிக்கிட்டு, ”ஹண்டர் கமிங்டா.. ரன்-டா... ரன்-டா”-ன்னு படமெடுத்தா... ஓடாம என்னத்தப் பண்ணுறதாம்??

அட போங்கப்பா.... மீ டயர்ட்!!!
மாதிரி

No comments:

Post a Comment