வேதியியலில் தற்போது, "மெட்டீரியல் சயின்ஸ்' என்ற துறையின் பயன்கள், பரவலாகி வருகின்றன. எந்தவொரு துறையிலும், அதன் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் பொருட்களை, புதிதாக தயாரிப்பதற்கும், ஏற்கனவே உள்ள பொருட்களில் உள்ள குறைகளை நீக்குவதற்கும், "மெட்டீரியல் சயின்ஸ்' துறை பயன்படுகிறது. மருத்துவத்துறையில், உடலின் உள் உறுப்பு களுக்கு மாற்றாக, அதற்கு இணையான பொருட் களை உருவாக்குவதில், "மெட்டீரியல் சயின்ஸ்' முக்கியப் பங்காற்றுகிறது. பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பிரச்னை களைத் தீர்க்க, செயற்கை இதய வால்வுகள் அவசியமாகும். தற்போது "மெட்டீரியல் சயின்ஸ்' துறையின் ஆராய்ச்சிகளால், இந்தியாவிலேயே செயற்கை இதய வால்வுகள், குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 10 லட்சம் குழந்தைகள், இதய வால்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால், இனி வருங்காலத்தில் செயற்கை வால்வுகளின் உற்பத்தியும் அதிகரிக்கக் கூடும்.
No comments:
Post a Comment