லண்டன் : உலகில் அதிக கவர்ச்சியானவர்கள் யார் என்று நடந்த சர்வேயில் இந்தியர்களுக்கு எட்டாம் இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில், பிரிட்டனில் உலகில் யார் அதிக கவர்ச்சியானவர்கள் என்ற சர்வேயை http://www.onepoll.com என்ற இணையதளம் நடத்தியது. அதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.
அந்த சர்வேயின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாக "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை கூறியிருப்பதாவது: அமெரிக்க ஹாலிவுட்டின் ஜார்ஜ் க்ளூனி மற்றும் நடிகை ஏஞ்சலினா ஜோலி இவர்கள் முதலிடத்திலிருக்கின்றனர். இரண்டாமிடம் பிரேசிலுக்கு. மூன்றாமிடத்தில் ஸ்பெயினும், நான்காமிடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. சுவீடன் ஆறாவதாகவும், பிரிட்டன் ஏழாவதாகவும் இருக்கின்றன. இந்தியாவின் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், காத்ரீனா கைப், சல்மான் கான் போன்றோர் எட்டாமிடத்தில் இருக்கின்றனர். பிரான்ஸ் ஒன்பதிலும், கனடா பத்தாம் இடத்திலும் உள்ளன. அடுத்த பத்து இடங்களில் போர்ச்சுகல், ஜப்பான், நெதர்லாந்து போன்றவை இருக்கின்றன. 20 வது இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. இவ்வாறு அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment