நாம் ஏதாவது புது மேன்தொகுப்பையோ, அல்லது புது வன் பொருட்களையோ கணினியில் நிறுவும் போது, அது அந்த கணினியோடு ஒத்துப் போகாததால், கணினியே செயல் இழந்து விட வாய்ப்புண்டு.
இந்த மாதிரி சமயங்களில், கணினியை Format செய்து மீண்டும் நிறுவுவதைத் (Install) தவிர வேறு வழி இல்லாமல் இருந்தது. அதற்காக உருவாக்கப் பட்டது தான், System Restore .
இது ஒரு கணினியை அதன் முந்தய நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறது.
எனக்கு தெரிந்து இது விண்டோஸ் me (Windows 98, Millennium edition ) பதிப்பில் தான் முதன் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டது.
கணினியில் அடிக்கடி புது தொகுப்புகள் நிறுவுவதும், எடுப்பதும் ஆக இருப்பவர்க்கு இது ஒரு வரப் பிரசாதம். MS ஆபீஸ் தொகுப்புகளில் "undo " செய்வது போல் முழு கணினியையே undo செய்து விடலாம், பழைய நிலைமைக்கு.
நமது கணினியில் இதை அணுக
Start--> All Programs--> Accessories--> System Tools--> System Restore.
செல்லவும். இதற்கு அதிகமாக இடம் ஒதுக்கினால், நிறைய Restore point களை அதனால் சேமிக்க முடியும் .
பொதுவாக ஏதாவது பெரிய தொகுப்புகளை நிறுவும் போது விண்டோஸ் அதுவாக Restore point ஐ உருவாக்கும். இருந்தாலும், சந்தேகம் இருந்தால், நீங்களாகவும் உருவாக்கலாம்.
நீங்கள் மறந்து விடவும் வாய்ப்புண்டு, அதற்காகவே ஒவ்வொரு புது மேன்தொகுப்பை நிறுவும் போது Restore point ஐ உருவாக்குவதற்கு இந்த சிறிய மேன்தொகுப்பு பயன்படுகிறது.
No comments:
Post a Comment