Saturday, February 20, 2010

திருமலைக்கு மண்ணுளி பாம்புடன்காரில் வந்த பக்தர்கள் 6 பேர் கைது

நகரி:மண்ணுளி பாம்புடன் திருமலைக்கு காரில் பயணம் செய்த பக்தர்கள், அலிபிரி போலீசாரிடம் சிக்கினர்.பிரகாசம் மாவட்டம், செலமகூடு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன ராவ் குடும்பத்தினர் ஆறு பேர் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தனர்.திருப்பதி அலிபிரி டோல்கேட் அருகே போலீசார் இந்த காரை சோதனையிட்டதில் காரின், "டிக்கி'யில் மண்ணுளி பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மண்ணுளி பாம்பு கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள காரில் வந்தவர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இவர்களிடம் விசாரித்ததில் ஊரிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது வழியில் மண்ணுளி பாம்பை கண்டதாகவும், அதை காரில் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். பாம்பை பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரணைக்காக திருமலை வனத்துறை அதிகாரிகளிடம், இவர்களை ஒப்படைத்தனர்.இதையடுத்து அதிகாரிகள், மல்லிகார்ஜுனா, அவரது மனைவி மாதவி மற்றும் அவர்களது உறவினர்கள் நால்வரையும் கைது செய்தனர்.

No comments:

Post a Comment