Friday, February 26, 2010

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் பாக்., வீரர்

 


கராச்சி: பாகிஸ்தான் அணியில் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி டெஸ்ட் (0-3), ஒருநாள் (0-5) மற்றும் "டுவென்டி-20' (0-1) என தொடரில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதுகுறித்து தற்போது விசாரணை நடக்கிறது. இதனிடையே இந்த தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த கம்ரான் அக்மல் (28) மீது, சூதாட்ட புகார் கிளம்பியுள்ளது. இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி, வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் இவர் நழுவவிட்ட மூன்று "கேட்ச்' வாய்ப்புகளால் தப்பிய ஹசி (134*), சதமடித்தார். தவிர, வாட்சன், சிடில் ரன்அவுட் வாய்ப்புகளை வீணடித்தார். பின் இவர் பேட்டிங்கிலும் ஏமாற்ற, எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை, பாகிஸ்தான் அணி கோட்டை விட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' தொடரில் இருந்து நீக்கப்பட்டார். சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடக்கும் நிலையில், "டுவென்டி-20' உலக கோப்பை உத்தேச அணியில் கம்ரான் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது.
இஜாஸ் மறுப்பு:
சூதாட்டம் தொடர்பான செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் இஜாஸ் பட் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" நாங்கள் தற்போதுள்ள வீரர்கள் குறித்து பேசவில்லை. "மீடியா' தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடைந்த தோல்வி குறித்து விசாரணை நடக்கிறது. அதன் முடிவு வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
 
 

No comments:

Post a Comment