வானவில்லின் 
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,
வாழ்க்கையின் 
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!
வரன்கள் 
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில் 
வயிற்றை நிரப்பிக்கொண்டு,
வயது 
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை 
கொடுக்க வழியில்லையே என்று!
உடல் 
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?
பழமுதிர் 
சோலையாகவேண்டிய 
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?
முதிர்க் கன்னிகளின் 
காத்திருப்புக்கு 
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?
கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள் 
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.
கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....
No comments:
Post a Comment