Saturday, February 20, 2010

பாதுகாப்பான இடம்தான்: ஐ.பி.எல். போட்டி ஐதராபாத்தில் நடத்தலாம்; மத்திய உள்துறை செயலாளர் தகவல்


 
3-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 12-ந்தேதி தொடங்குகிறது. தெலுங்கானா பிரச்சினையை தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஐதராபாத், விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த போட்டிகள் மராட்டிய மாநிலம், பெங்களூர், நாக்பூருக்கு மாற்றப்பட்டது.
 
இதற்கு ஆந்திர அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது டெக்கான் சார்ஜர்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகபோவதாக மிரட்டல் விடுத்தது. இதை தொடர்ந்து டெக்கான் மோதும் போட்டியாக 3 ஆட்டம் ஒரிசா மாநிலம் கட்டாக்குக்கு மாற்றப்பட்டது. இதை டெக்கான் அணி ஏற்றுக்கொண்டது.
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பாதுகாப்பான இடம், அங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்தலம் என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
ஐ.பி.எல். போட்டிகளை ஐதராபாத்தில் இருந்து மாற்றியது சரியான முடிவு இல்லை. ஏனென்றால் தீவிரவாத மிரட்டல் எதுவும் அந்த நகருக்கு இல்லை. தெலுங்கானா பிரச்சினை மட்டும்தான் உள்ளது.
 
ஐதராபாத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தலாம். அது பாதுகாப்பான இடம்தான். நாங்கள் முழு பாதுகாப்பு அளிக்கிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment