Saturday, February 27, 2010

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் சாவு

காஷியாபாத், பிப். 27-
 
 
உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத் அருகே கன்னார் கிராமம் உள்ளது. ஹோலி பண்டிகையையொட்டி அங்கு பலர் கள்ளச்சாராயம் குடித்தனர். அவர்களில் அஜய்குமார் (35), ஜிதேந்தர் (32) உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
 
இவர்கள் தவிர 7 பேர் வாந்தி மயக்கத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மீரட், காஷியாபாத், சார்க்முக்தேஷ்வர் ஆகிய நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
தகவல் அறிந்ததும் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த 100 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எம்.கே.சர்மா, போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment