Saturday, February 20, 2010
ஆந்திர சட்டசபையில் மாணவர்கள் முற்றுகை ; எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யுங்கள்
ஐதராபாத்: ஆந்திராவில் தனித்தெலுங்கானா கோரி நடந்து வரும் போரட்டத்தில் மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சட்டசபை முன்பு கூடினர். தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில் இன்று மாணவர்கள் குவிந்திருப்பது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனித்தெலுங்கானா அமைவது தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மேற்கொள்ள வேண்டிய வரைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. இது தனித்தெலுங்கானா அமைவதில் காலம் தாழ்த்தும் செயல் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சியைச் சேர்ந்த 10 பேர், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர், பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 15 எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த வாரம் துவங்கிய கூட்டத்தில் கவர்னர் நரசிம்மன் உரை நிகழ்த்த துவங்கியதும் தெலுங்கானா ஆதரவாளர்கள் ஜெய் தெலுங்கானா என கோஷமிட்டனர். இதனால் சபையில் 45 நிமிடம் கடும் அமளி ஏற்பட்டது.சபையை புறக்கணித்த எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் 116 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினமா செய்ய வேண்டும் என்றும் தெலுங்கானா ஒருங்கிணைப்பு குழு கேட்டு கொண்டுள்ளது.
இன்று மாணவர்கள் வெகுண்டெழுந்தனர்: இன்று காலை சபை துவங்கியது. சபை முன்பாக உஸ்மானிய மாணவர்கள் சட்டசபை முன்பாக குவிந்தனர். ஆங்காங்கே கோஷம் எழுப்பியபடியும், பேரணி சென்றபடியும் உள்ளனர். இதற்கென 20 போ,லீசார் கூடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல ரயில்வே தடங்களில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் வாரங்கல் - காசிபேட் இடையிலான 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment