"செல் டவர் கதிரியக்கம் முட்டைகளை அழிக்கும்!' சிட்டுக்குருவிகள் குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலரும், இயற்கை உலக நிதியகத்துக்கான அறங்காவலருமான தியோடர் பாஸ்கரன்: சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, முன் நாம் எளிதில் கண்ட பல பறவைகளையும் கூட, இப்போது அரிதாகத் தான் பார்க்க முடிகிறது. சுற்றுப்புற சூழலின் இயல்பு கெடாமலிருப்பதற்கு பறவைகள் ஒரு குறியீடு. வயல் வெளியிலோ, ஏரியிலோ, பறவைகளே இல்லாதிருந் தால், அங்கு சுற்றுச் சூழல் மாசுபட்டிருக்கிறது, நீரில் வேதியியல் பாதிப்பு இருக்கிறது என்று யூகிக்கலாம். நம் நாட்டில், 1949ல் அறிமுகம் செய்யப்பட்ட, "டிடிடி' சார்ந்த இம்மருந்துகளை தொடர்ந்து, பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்தனர்; பறவைகளுக்கு பிடித் தது கேடுகாலம். பூச்சி மருந்துகள் தீமை இழைக்கும் சிறு உயிரினங்களை மட்டுமல்லாமல், மருந்து தெளிக்கப்படும் இடத்திலுள்ள எல்லா பூச்சி, புழுக்களையும் அழிக்கின்றன. அதுமட்டுமல்ல, பழைய காலத்தில் ஓட்டு வீடுகள் அதிகம் இருந்த போது, அந்த ஓட்டின் இடைவெளியில் கூடுகட்டி, பல்கி பெருகிக் கொண்டிருந்தன. ஓட்டு வீடுகள் மறைந்து, கான்கிரீட் கட்டடங்கள் வந்தபின், குருவிக்கு கூட கட்ட இடமில்லை. மூன்றாவது காரணம், மொபைல்போன் டவர்கள் என்று சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கோவையிலுள்ள சலிம் அலி பறவையியல் இயற்கை வரலாறு மையத்திலுள்ள உயிரியலா ளர்கள், ஒரு பரிசோதனை செய்து இதை அறிந்துள்ளனர். ஐம்பது முட்டைகளை செல் டவர் கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமிடம் வைத்து, பின் பரிசோதித்ததில், எல்லா முட்டைகளின் கருக் களும் சிதைக்கப்பட்டிருந்ததை பதிவு செய்திருக்கின்றனர். மனிதருடன் மிக நெருக்கமாக இருந்த பறவை சிட்டுக்குருவி. வீடுகளிலும், பொது இடங்களிலும் அதன் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். இன்று நம்மை விட்டு விலகிப் போய் விட்டது.
No comments:
Post a Comment