Wednesday, February 24, 2010

ஆணி புடுங்கிங் டெக்னாலஜி

 
புதுசா குடி போன வீட்டுலே, வீட்டுக்காரன் சொன்னான்.
சுவத்துலே புதுசா ஆணி எதுவும் அடிக்கக்கூடாது.இருக்குற ஆணி எதுவும் புடுங்கக்கூடாது.
அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு,தமிழ்மணத்துலே மக்கள்ஸ்
அடிக்கடி இந்த வார்த்தைய உபயோகிச்சு கேட்டுருக்கேன்.
“ஆணி புடுங்கறேன்,ஆணி அடிக்கிறேன்”. இதெயே திருப்பி திருப்பி சொல்லுவாங்க.
அதுக்கெல்லாம்தான் மிஷினு இருக்குதே, இன்னமும்
ஏன் நாளெல்லாம் அதையே செய்யுறாங்கன்னு குழம்பிப்போயி கூகிளாண்டவர்கிட்டே கேட்டா “இதத்தான்” காட்டுனாரு. அவுரு சொன்னாரு “ஆணி அடிக்கத்தான் மிஷின் இருக்குது. புடுங்கறதுல உங்க ஆளுங்கதான் திறமசாலிங்க”. அதனாலதான் உலகம் முழுக்க நம்ம ஆளுங்க தெறம தேவைப்படுதுன்னு நெனைக்கிறேன்.
இப்ப பொழுது போகாம ஆணி புடுங்கும்போது இந்த
டெக்னாலஜிய பத்தி யோசிச்சு சொல்லுங்க. 

No comments:

Post a Comment