Sunday, February 28, 2010

பாகிஸ்தான் வீரர்கள் அக்மல், ரானாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு?



கராச்சி, பிப்.28-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மிகவும் மோசமாக விளையாடி தோற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு சூதாட்டம்தான் காரணம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் கமரன்அக்மல், ரானாநவித் ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
 
இருவரும் மேட்ச் பிக்சிங் கில் ஈடுபட்டுள்ள தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து உள்ளது. இதனால் இருவர் மீதும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
 
சூதாட்டம் தொடர்பு காரணமாக துபாயில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 20 ஓவர் போட்டியில் இருந்து இரு வரும் நீக்கப்பட்டனர்.
இருவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட தேர்வு அணியில் இடம் பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட அணியில் அவர்கள் இடம் பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதில் கமரன்அக்மல் விக்கெட் கீப்பர் ஆவார். ரானா நவித் வேகப்பந்து வீரர் ஆவார்.

No comments:

Post a Comment