Friday, February 19, 2010

காமன் வெல்த் ஆரம்பமே நல்ல அறிகுறி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம்

புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. ஆரம்பமே நல்ல அறிகுறியாக இந்தியா நல்ல வெற்றிக்கணக்கை துவக்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 3 ம் தேதி டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா , தென்ஆப்ரிக்கா, கனடா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா , மலேசியா உள்ளிட்ட 54 நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஆயத்தப்பணிகள் டில்லியில் துரிதமாக நடந்து வருகிறது. இந்த போட்டியின் முன்னோட்ட போட்டிகள் பலக்கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது .

இந்த சோதனை ஆட்டத்தில் ஜிம்னாஸ்டிக், அத்தலெட்டிக், டென்னிஸ் , பாக்சிங், சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. கடந்த 17 ம் தேதிமுதல் துவங்கிய இந்த நிகழ்வில் துப்பாக்கி சுடும் போட்டி ( இன்று 19 ம் தேதி) டில்லி கார்னிசிங் சூட்டிங் தளத்தில் நடந்தது. இந்த போட்டியில் 10 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் ககன் நரங் ( 599 ) , பி,டி,ரகுநாத் (594 ) புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். அனிசா சையீது , அனுரங்க சிங் ஆகியோர் 25 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் தங்கத்தை வென்றனர். 50 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் வீரத்சிங் பாபுவன்ஜார் சில்வர் பதக்கம்‌ பெற்றனர்

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றது போல் நடக்கவிருக்கும் காமன் வெல்த் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் தங்கம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை விளையாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

No comments:

Post a Comment