Tuesday, February 23, 2010

3 சிம் கார்டு செல்போன் 3 சிம் கார்டு செல்போன்


புதுடெல்லி : இந்தியாவில் முதன் முறையாக 3 சிம் கார்டுகளை பயன்படுத்தும் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.4,700.
ஒரே செல்போனில் 2 ஜிஎஸ்எம், 1 சிடிஎம்ஏ சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வசதியை இன்டெக்ஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. ஐஎன் 5030 என்ற அந்த மாடலில் 3 சிம் வசதி மட்டுமின்றி, 2 அங்குல ஸ்கிரீன், மொபைல் டிராக்கர் சாப்ட்வேர் உள்ளது. ஆட்டோ கால் ரெக்கார்ட், 2 எல்இடி டார்ச் லைட், 1.3 எம்பி கேமரா, வெப்கேம் வசதி ஆகியவையும் இந்த செல்போனில் உள்ளன.
மேலும், ப்ளூடூத், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் ஆகியவையும் உண்டு.  4 ஜிபி வரை மெமரி கார்டு பொருத்தும் வசதியும் இந்த செல்போனில் இருக்கிறது.


No comments:

Post a Comment