மும்பை, பிப்.27-
இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடித்த வீர் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக போல் பானு ஷேக் என்ற 30 வயது ஊனமுற்ற பெண்ணின் படத்தை சல்மான் பயன்படுத்தி இருந்தார். படத்துக்கான விளம்பர போஸ்டர்கள், பேனர்களில் அப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. இதற்காக அப்பெண்ணுக்கு சல்மான்கான் ரூ.1 லட்சம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சல்மான்கானுக்கு எதிராக போல் பானு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். பட விளம்பரங்களில் என் படத்தை சல்மான்கான் பயன்படுத்தியது தவறு. இதற்காக அவர் ரூ.25 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ரூ.1 லட்சம் வாங்கியதாக வெளியான தகவலையும் மறுத்தார். போல் பானு கூறும்போது, கடந்த வருடம் சல்மான்கான் படப்பிடிப்பை காண உறவினர்களுடன் ஸ்டூடியோவுக்கு சென்றேன். அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினேன். படப்பிடிப்பில் இருந்த ஒரு போட்டோ கிராபர் படம் எடுத்தார். அந்த படத்தை பட விளம் பரங்களில் வெளியிட்டு மோசடி செய்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment