Tuesday, February 23, 2010

விண்வெளியில் புதிய சூரியன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


வாஷிங்டன், பிப். 23-  
 
விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
 
தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.
 
இது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது.
 
இந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
 
இந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment