Saturday, February 27, 2010
கிரிக்கெட் அணியில் இடம் பெறதேர்வுக்குழு தலைவர் ஆலோசனை
திண்டுக்கல்:""கிரிக்கெட்டில் வாய்ப்புகள் கிடைக்கும் போது, திறமையை நிரூபிப்பவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும்,'' என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் பேசினார்.திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில், இன்ஜி., கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், பரிசுகளை வழங்கி பேசியதாவது:""மாவட்ட கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இதுபோன்ற விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொள்வது அவசியம். கிரிக்கெட் தேர்வுக்குழுவில் பரிந்துரைகளை விட, திறமைக்கு அதிக மதிப்பு கிடைக்கும். உரிய வாய்ப்புகளில் திறனை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சச்சின் டெண்டுல்கரின் தொடர் சாதனைகளுக்கு, அவரது பணிவும், தன்னம்பிக்கையும், ஆர்வமும் காரணமாக அமைந்துள்ளன. குறிப்பிட்ட சாதனையை இவரால் மட்டுமே முடிக்க இயலும் என இறைவன் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதன்படி தனது சாதனைகள் மூலம் கிரிக்கெட்டின் கடவுளாக உயர்ந்து நிற்கிறார். மூளையை கேட்டு செயல்படுவதால், ஒரே நிலையில் செயல்படுவதில் குழப்பம் தடைகல்லாக இருக்கும். இதயத்தோடு இணைந்த செயல்களில் மட்டுமே முழுமையான இலக்கை எட்ட முடியும். மாணவர்கள் அனைத்து துறைகளிலும், தன்னம்பிக்கை, ஆர்வம், துணிவுடன் துரிதமாக செயல்படுதல், எண்ணியதை முழுமையாக செயல்படுத்துதல், உறுதியான மனநிலையுடன் இருத்தல் போன்றவற்றின் மூலம் வெற்றிக்கான இலக்கை எளிதில் அடையலாம்,''இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ்.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment