உச்சிப்புளி : உடலில் வலிமை இருந்தவரை குடும்பத்திற் காக உழைத்து ஓடாக தேய்ந்து போன முதியவர்கள் பலர் உள்ளனர்.அவர்களில் சிலர் ,ஓய்வெடுக்க வேண்டிய வயதில் உழைத்து வாழும்சூழ்நிலையில் உள்ளனர். அந்த வரிசையில் உச்சிப்புளி அருகே ரெட்டையூரணி கிராமத்தை சேர்ந்த நவமணி என்ற பார்வை இழந்த 60 வயது விதவை பெண், தளராத நம்பிக்கையுடன் 25 ஆண்டுகளாக பாய் முடைந்து வருகிறார்.
உச்சிப்புளி அருகே ரெட்டையூரணியை சேர்ந்த காமாட்சி மனைவி நவமணி. இவர் தலைவலியால் அவதியடைந்து,நாட்டு மருந்து சாப்பிட்டதில் கண் பார் வையும் பறி போனது. கணவருக்கு உதவிடும் வகையில், பார்வை இழந்த இவர் ,தானே ஓலை வார்த்து, பாய் முடையும் தொழில் ஈடுபட்டு வந்தார்.கடந்த ஏழுஆண்டுகளுக்கு முன் கணவரும் இறந்தார்.குழந்தையும் இல்லாத நிலையில் விதவையான இவரோ, மூலையில் முடங்காமல் பாய் முடையும் தொழிலில் மீண்டும் ஆர்வம் செலுத்தி வருகிறார் . நாளொன்றுக்கு இரண்டு பாய்கள் வரை முடைகிறார். காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்வது முதல் பாத்திரம் கழுவுவது வரை, எவ்வித தடங்கலும் இல்லாமல் கச்சிதமாக செய்கிறார்.
தற்போது ,கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன்,மருமகளுடன் வசித்து வருகிறார்.25 ஆண்டுகளாக பார்வை தெரியாத நிலையில் வாழ்ந்துவரும் இவருக்கு, அரசின் பார்வையற்றோருக்கான சலுகைகள் வழங்கப் படவில்லை என்பது வெந்த புண்ணில் "வேல்' பாய்ச்சுவது போல் உள்ளது.
நவமணி கூறியதாவது:குடும்பத்தினருக்கு உதவியாக பாய் முடையும் தொழிலில், பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். பார்வையற்றோருக்கான உதவி பெற பல முறை முயற்சித்ததும், அடையாள அட்டை வழங்கப்படவில்லை, என்றார்.
No comments:
Post a Comment