Wednesday, February 17, 2010
அன்னிய முதலீடு அதிகரிப்புக்கு இந்திய இளைஞர்களின் அறிவே காரணம்
ஒசூர், பிப்.16: இந்திய இளைஞர்கள் அறிவு ஜீவிகளாகத் திகழ்வதே அன்னிய முதலீடு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூறினார்.ஒசூரில் புதிய வருமானவரி அலுவலகத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத் திறந்து வைத்து அவர் பேசியது:சீனா வில்தான் அதிக அளவில் அன்னிய முதலீடு குவிவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அங்கு முதலீட்டுக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் இந்தியாவில் உத்தரவாதம் உள்ளது. காரணம் இங்கு அறிவும், திறமையும் கொண்ட 60 சதவீத இளைஞர்கள் உள்ளனர்.இந்தியாவில் 2007-08ல் ரூ.2,78,450 கோடி வருமானவரி வசூல் செய்யப்பட்டது. 2008-09ல் ரூ.2,59,456 கோடியும், 2009-10ல் ஜனவரி வரை ரூ.2,63,691 கோடியும் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தை ஒப்பிடுகையில் இது 6.59 சதவீதம் கூடுதலாகும்.தொழில் வளர்ச்சி அதிகரித்ததனால் வருமான வரியும் உயர்ந்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை அரசு எளிதில் மேற்கொள்ள முடிகிறது என்றார் அவர்.இ.ஜி.சுகவ னம் எம்பி பேசியது: ஜோலார்ப்பேட்டையிலிருந்து திருப்பத்தூர், பர்கூர், சூளகிரி வழியாக ஒசூருக்கு ரயில் பாதை அமைக்கும் பணிக்கு சர்வே நடந்து முடிந்துவிட்டது. இந்த ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமையில் திமுக எம்பிகள் நேரடியாகச் சென்று மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். விரைவில் இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பை மத்திய ரயில்வேத் துறை வெளியிடும் என்றார். விழாவில் எம்எல்ஏ செங்குட்டுவன், ஒசூர் நகரமன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா, மத்திய வரி விதிப்பு ஆணைய தென் மண்டல உறுப்பினர் பிரகாஷ் சந்திரா, சென்னை முதன்மை வருமானவரி ஆணையர் பிரேமாமாலினி வாசன், திருச்சி வருமானவரி ஆணையர் சாரங்கி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment