நாதாரி இருக்கானா.. இல்ல போயி சேந்துட்டானனு ஒரு டவுட்...
எதுக்கும் 50 டாலரக் கையில எடுத்துகிட்டு , 'ங்கொய்யா... இருந்தா நமக்கு.. இல்லாட்டி அவனுக்கு 'னு நினச்சுட்டு பூன்-லே( BoonLay ) போனேன்..
(எதுக்கா........யோவ்.... இங்க செத்துப்போனா பணத்த கவர்ல போட்டு இழவு வீட்டுக்கு கொடுப்பாங்கய்யா !! )
போயிப் பார்த்தா Mr.சின்ராசு ( பெரிய ஆள் ஆயிட்டான் சார் அவன்.. தப்பு..தப்பு...........அவர் .. )
மூணு செல்போன் சார்..அதுவும் லேட்டஸ்ட் மாடல்
மேல் பாக்கெட்ல் ரெண்டு , பேண்ட் பாக்கெட்ல ஒண்ணு
தோள்ல லேப்டாப்..தலையில தொப்பி..
அதை உடுங்க.......
தலைசீவ...." சீப்பே " ரெண்டு வச்சிருக்கான பார்த்துக்குங்களே.....
சந்தோசமா தோள்ல கைபோட்டு , தேத்தண்ணி( Tea ) சாப்பிட கூட்டிட்டு போறார் அய்யா... எனக்கு கை.. நம நமங்க்குது...
"எப்படி சின்ராசு அண்ணே...? இவ்வளவு சீக்கிரம் பெரியாளாயிட்டிங்க?. லாட்டரில ( 4D../ TOTO ) பணம் பார்த்திட்டிங்க போல...", -கேட்க , ஒரு புன்சிரிப்ப சிரிச்சா பாருங்க... நான் பஸ் வருதானு பார்க்க திரும்பிட்டேன்..( ஊத்த பல்லு சார். மனுசன் அவன் முன்னால்
நிக்கமுடியுமா?..அந்த கேனச்சிரிப்பு மட்டும் மாறல... அவனுக்கு முன்னாடி அப்புடி சொல்ல முடியுமா பங்காளி...)
சின்ராசு- 'சரி.. தேத்தண்ணி குடிச்சு முடி.. உன்னைய.... என்னோட ஆபிஸ்க்கு கூட்டிட்டுப்போறேன்..'
பய பரவாயில்லையே.. ஆபிஸ் தொறக்கர அளவுக்கு பெரிய மனுசனாயிட்டான்..இவனை கைக்குள்ள போட்டுவெச்சுட்டா நாளை பின்னே , வெளியூரோ அல்லது ரெட்டையவோ, முடிக்கும் போது,
இந்த பீஸயும் கூடப் போட்டுட்டு.... ஆபிசுக்கு நாமளே முதலாளியாரலாம்...னு நான் மனசுல நினச்சத , நாயிப்பய மூஞ்சியப் பார்த்தே கண்டுபிடுச்சுட்டான்...
இதுல பயபுள்ள "டாக்ஸில" வேற கூட்டிட்டுப்போறான்..
ஆபிஸ் போறவரை ஏதாவது பேச்சுக் கொடுத்து "Business Tricks"-ச கறந்துடலாமுனு பாத்தா... ஊகும்.. மனுசன் வாயே தொறக்க மாட்டிங்கிறான்..
சரி.. இவங்கிட்ட இப்படி பேசுனா காரியம் ஆகாது.. வேறமாறி கேக்கலாமுனு "ஏன் சின்ராசு.. இன்னுமா கார் வாங்கலையா ?" னு நான் கேட்க...
" இல்லப்பு ..பாத்துட்டு இருக்கேன். இன்னும் செட் ஆகலை "-னு நக்கலா சிரிக்கிறான்..
ங்கொய்யா.. அப்ப முடிவுபண்ணுனேங்க..
நானும் பிஸுனஸ் பண்ணி பெரியாளாயி இந்த நாய, நம்ம ஏரோபிளேனுல ஏத்தக்கூடாதுனு..
டாக்ஸி " RedHills- MRT "-யில போய் நிக்குது..
நம்ம ஹீரோ இறங்கி நேரா டாய்லெட் பக்கமா போறான்..
நான் தயங்கறேன்.. கையப் புடிச்சு இழுத்துட்டு போறான்..
பக்கத்தில டேபிள் சேர் போட்டிருக்கு..
மனுசன் பந்தாவா போயி அதில் உக்காந்துட்டு , "மாப்ள.. வா.. ஆபிஸ்-ல உக்காரு..".-னு சொல்றான்..
வந்ததே கோபம்.. "பரதேசி நாயி.. இததான் பிஸ்னசு.. ஆபிஸ்னு பேசிட்டு வந்தயா.. சே..கண்றாவிடா.. நான் இங்கிருந்தா , எம்பேரு நாறிடும்.. இனி உம் மூஞ்சியில முளிச்சா என்னடானு கேளு"..
பாருங்க சார்.பேச பேச காத்துதான் வருது...( தப்பா நினைக்காதிங்கண்ணே .. நான்
"டே.. முடிட்டு உக்காரு.. நானும் மூளக்காரன்தான்..10 நிமிசம் உக்காரு.. 100 வெள்ளி சம்பாரிக்கலாம்"-சின்ராசு..
"என்ன ... அவனுகளுக்கு கு^% கழுவியுட்டா ?"..கோபமா நான் கேட்க,
"பரதேசி.. கோவத்துல கூட, உனக்கு மூளை வேலை செய்யாதா?..இவனுக எங்கடா தண்ணியூத்தி கழுவுவானுக?. எல்லாம் பேப்பர்தான்" அந்த 'situvation' -லையும் நாயிக்கு நக்கல் பாருங்க...
"சின்ராசு.. நான் கிளப்பரேன்.. யாராவது பாத்தா, நாய்க்கர் மகன் கக்கூசுல காவலிருக்கானு எங்கப்பனுக்கு
போட்டு குடுத்துருவானுக .. அப்புறம்"- நான் பின்னாடி தேச்சுட்டு எந்திரிக்க...
"பாரு... பிஸ்னஸ் வர்ற நேரம் இப்படி கத்திட்டு இருக்காதே.. ஒரு 5 நிமிசம் அப்படி ஓரமா நின்னு கவனி " - சின்ராசு.
நானும், அவனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லாத மாறி கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டேன்...
ஒரு சீனன் ஓடி வர்றான்.. சின்ராசு பல்ல காமிச்சுட்டு " Tissue paper " -ர கொடுத்துட்டு உள்ள கையக்காண்பிக்கிறான்.
தாங்க முடியல சார்.. நேராப் போனேன்..
"யோவ்.நாதாரி.. காசு போட்டு டிஸ்யு பேப்பர் வாங்கி, இந்த கம்மனாடிகளுக்கு சும்மா கொடுக்கறையா?....நீ ஒரு பிஸ்னஸ் மேக்னெட்னு உங்கூட வந்தேன் பாரு..என்னய்ய......
சே... இந்த பொழப்பு பொழைக்கிரதுக்கு , பெருமாள் கோயிலில(செராங்கூன்), உண்டகட்டி வாங்கித் திங்கலாமடா.." சொல்ல
சின்ராசு 'பொறுடா.. இப்ப நடக்கறதப் பாரு.தக்காளி.. 5 நிமிசனு சொல்லியிருக்கேனில்ல ' சொல்ல நான் திரும்பி பழைய எடத்துக்கே வந்து நின்னுட்டேன்...
2 நிமிசம் இருக்கும் சார்.. வேகமா உள்ள போன சீனன் ,
கால விரிச்சுட்டு நடக்கமுடியாம , மெதுவா திரும்பி வரான்..சின்ராசும் அவனும் என்னவோ பேசிக்கிராங்க.. சீனன் அவங்க பாசையில , அனேகமா சின்ராசு பரம்பரையத் திட்டுறானு புரியுது.. ங்கொய்யா.. அதுக்கும் அசராம பல்லை காமிச்சுட்டு நிக்கிறான் சார்...
சீனன் பாக்கெட்-ல இருந்து 50 வெள்ளியெடுத்து நம்மாளுகிட்ட கொடுக்கறான்.. பய வாங்கி சொருகிட்டு (பாக்கெட்ல) , வேற Bag-ல இருந்து டிஸ்யூ எடுத்து அவனுக்கு கொடுக்கறான்.. சீனன் வாங்கிட்டு பரிதாபமா திரும்பவும் உள்ள போறான் சார்..
சின்ராசு திரும்பி, என்னைப் பாத்து கண்ண வேற சிமிட்டறான்..
என்னடா இழவு நடக்குது ?. நிமிசத்தில 50 வெள்ளி சம்பாரிச்சுட்டானே..நல்ல மண்டக்காரந்தான் நினைச்சுட்டு..... பக்கத்தில போயி "என்ன சின்ராசு நடக்குது..எனக்கு ஒண்ணுமே புரியல-னு மண்டையச் சொறிஞ்சேன்..
டேய்.. முதல்ல நான் சும்மா கொடுத்தது உப்புக்காகிதம் ( SandPaper..பெயிண்ட் அடிக்கறது முன்னாடி சுவத்தில தேய்ப்பாங்களே.. அது )..
அப்புறம் ரெண்டாவதா தந்தது " Tissue paper " .. ஆனா அதுக்கு விலை.... நான் சொல்ற ரேட்டுதான்..
கொஞ்சமா புரிஞ்சுடிச்சு.. நானும் மண்டக் காரனாச்சே..
'சரி.. தொடச்ச பிறகு , பார்த்தா , அவனுகளுக்கு உப்பு காயிதமுனு தெரிஞ்சுடுமே..அப்ப மாட்டிகுவே மாப்ள..'
டேய்.. மனுச சைக்காலஜி தெரியுமா முட்டாளே?.. எவனாவது தொடச்சுட்டு பார்ப்பானாயா?.. வேற வழி......உள்ள பேப்பரு இல்ல.............
வா........................ நம்மகிட்ட................அப்ப, நான் சொல்ரதுதான் ரேட்டு..
'அப்ப அந்த செல்போனு , லேப்டாப் எல்லாம்" .- நான் இழுக்க
சின்ராசு - " காசு இல்லாத பன்னாடைக இப்படி கொடுத்திட்டு போயிடரானுக.. நான் ரொம்ப நாளா நல்ல கார் வேணுமுனு பாத்துட்டு இருக்கேன்' சொல்றான்..
சரி மக்கா... ஊர்ல எல்லாரும் தண்ணிய யூஸ் பண்ணுவாங்களே.
அப்ப எப்படினு யோசனை பண்றீங்களா?..
உங்க பிரச்சனை புரியுது... ஊர்ல ஜாவா சுந்த்ரேசனுக ஜாஸ்தி..
அவனுக வேலை செய்ய இடத்தில போயி நீங்க உங்க வேலையச் செய்யுங்க... அட.. "அந்திய மோகம் இருக்கும்வரை " ......... நாமதான் "கிங்கையா ( king ) "...
.
.
No comments:
Post a Comment