இதுவரை வெளியேவராமல் இருந்த மகாத்மா காந்தியடிகளின் அஸ்தியின் ஒரு பகுதி தென் ஆப்பிரிக்காவில் அரச மரியாதையுடன் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று ஆறு மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன்பாகவே,
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடல் எரியூட்டப்பட்டபிறகு - அவரின் அஸ்தி உலகின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட காந்தியடிகளின் அஸ்தியின் ஒரு பகுதி கரைக்கப்படாமல் இருந்தது இப்போதுதான் தெரியவந்துள்ளது.
2010 ஆம் ஆண்டு அவரின் நினைவு நாளில் இது கடலில் கரைக்கப்பட்டது.
ஆப்பிரிக்க இந்திய காங்கிரஸின் முயற்சியின் பேரில் இந்த அஸ்தி தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அந்த அஸ்தியின் ஒரு பகுதியை குடும்ப நண்பர் விலாஸ் மேத்தா என்பவர் காந்தியின் நினைவாக இதை தம்மிடம் வைத்திருந்தாகவும், அவரது மறைவுக்குப் பிறகு தம்மிடம் இந்த அஸ்தி கொடுக்கப்பட்டதாக, காந்தியின் பேத்தி இலா காந்தி தெரிவி்த்தார்.
இந்த அஸ்தியை கண்காட்சிகளில் வைப்பது சரியாக இருக்காது என்று குடும்ப உறுப்பினர்கள் கருதியதாகவும், உரிய மரியாதையுடன் கடலில் கரைக்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.
தென் ஆப்பிரிக்காவின் அரச மரியாதைகளுடன் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.
No comments:
Post a Comment