Monday, February 8, 2010

சந்திரயான் கைவிடப்பட்டது


நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன் 1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாகவும், அந்த விண்கலனை கைவிட்டு விட்டதாகவும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் சந்திராயன் கலத்தில் இருந்த சமிஞ்சைகள் முழுமையாக நின்றுவிட்டதாகவும், கலனுடன் தொடர்புகளை ஏற்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
கலன் செயல் இழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படுவதாக இந்த திட்டத்தின் இயக்குனர் அண்ணாதுரை தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் கடந்த நவம்பர் மாதத்திலும் பிறகு இந்த ஜூன் மாதத்திலும் பல சிக்கல்களைச் சந்தித்தது.
இருந்தும் இந்த சந்திரயானின் அறிவியல் நோக்கங்கள் முழுமையாக வெற்றிபெற்று விட்டதாகவும், தாங்கள் விரும்பிய தரவுகள் 95 சதம் வரை கிடைத்து விட்டதாகவும் திட்ட இயக்குனர் அண்ணாதுரை தமிழோசையிடம கூறினார்.

No comments:

Post a Comment