தந்திரமாக நடந்து பிறருக்கு கேடு செய்பவனை "இவன் சரியான குள்ளநரி' என்று விமர்சிப்பது வழக்கம். ஏன் இவர்களை குள்ளநரிக்கு ஒப்பிட்டார்கள் தெரியுமா?
குற்றாலம் போகிறீர்கள். அங்கே வீசும் தென்றல் காற்றை இனிமையாக ரசிக்கிறீர்கள். சாரலில் நனைந்து மகிழ்கிறீர்கள். குள்ளநரிக்கு ஒரு குணம் உண்டு. அதற்கு தென்றல் காற்றைப் பிடிக்காது. தென்றால் வீசினால் ஏதாவது புதருக்குள் போய் மறைந்து கொள்ளும். அதாவது எல்லாருக்கும் பிடிப்பது யார் ஒருவருக்கு பிடிக்கவில்லையோ, அவர் குள்ளநரி போல பதுங்குகிறார் என்று பொருள். இதைப் போல, சீதையைக் கடத்தி வைத்திருந்த ராவணனைப் பார்த்து, ""அவளை ராமனிடம் ஒப்படைத்து விடு அல்லது உனக்கு நல்லதல்ல,'' என்கிறான் அவனது தம்பி விபீஷணன். எல்லோருக்குமே அவனது இந்த நியாயமான பேச்சு பிடித்தது. ஆனால், ராவணனுக்கு மட்டும் பிடிக்கவில்லை. ராமாயண விமர்சகர்கள் இதுபற்றி குறிப்பிடும் போது, மற்றவர்கள் எல்லோரும் ஒன்றை ஏற்றுக்கொள்ள, ராவணன் மட்டும் ஏற்றுக்கொள்ளாததால் அவனை "குள்ளநரி' என்று குறிப்பிடுவர்.
No comments:
Post a Comment