சென்னை :"ஷால்' இதய மையம் சார்பில், இதயநோய் குறித்த ஒருநாள் வாழ் கலை பயிற்சி முகாம், ரஷ்ய கலாசார மையத்தில் நேற்று நடந்தது.இதில், இதயநோய் சிகிச்சை நிபுணர் பிமல் சாஜர், பைபாஸ் அல்லாத இதய நோயை குணப் படுத்தும் வகைகளான, "இயற்கை பைபாஸ், "பயோ கெமிக்கல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி' மற்றும் "ஷால்' இதய பயிற்சிகள்' குறித்து விளக்கினார்.
"இயற்கை பைபாஸ்' மூலம் ஒரு நோயாளியின் ரத்த ஓட்டத்தைச் அதிகரிக்கச் செய்து, இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவது, "பயோ கெமிக்கல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி' மூலம் ரசாயனத்தை செலுத்தி அடைப்பை நீக்குவது மற்றும் "ஷால் இதய பயிற்சிகள்' மூலம் இதய நோயைக் கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சிகள் குறித்தும் நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட்டது.இதய நோயால் ஏற் படும் பாதிப்புகள் குறித்தும், இதயநோய் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய தற்காப்பு முறைகள் குறித்தும், கொலஸ்ட்ரால் அல்லாத உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது."ஜீரோ ஆயில் டயட்' எனப்படும் எண்ணெய் சேர்க்காமல் உணவு வகைகள் சமைக்கும் முறைகள் குறித்து, சமையல் செய் முறை நிகழ்ச்சியும் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பங் கேற்றவர்களுக்கு, எண் ணெய் சேர்க்காத உணவுகள் வழங்கப்பட்டன."உயர் ரத்த அழுத்தத் தினைக் கட்டுப்படுத்த ஆலோசனைக் குறிப்புகள்' என்ற புத்தகத்தை, "ஷால்' இதய மையத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன் வெளியிட, ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., ராமராஜன் பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், இதய நோயினால் பாதிக்கப் பட்ட பலர் பங்�ற்று விளக்கம் பெற்றனர்.
No comments:
Post a Comment