Tuesday, February 16, 2010

ஜெயசூர்யா-ரணதுங்கா நேருக்கு நேர்! *இலங்கை தேர்தலில் பரபரப்பு

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் ஜெயசூர்யா, ரணதுங்கா ஒருவரை ஒருவர் எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளனர். கிரிக்கெட்டில் ஒன்றாக ஆடிய இவர்கள், தற்போது வெவ்வேறு கட்சிகள் சார்பில் களம் காண்கின்றனர்.
இலங்கையில் வரும் ஏப்., 8ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் ஜெயசூர்யா போட்டியிடுகிறார். தற்போது 40 வயதான இவர், மட்டாரா மாவட்டத்தில் இருந்து போட்டியிட உள்ளார். இது குறித்து அதிரடி வீரர் ஜெயசூர்யா கூறுகையில்,""அரசியலில் களமிறங்கியுள்ளதால், கிரிக்கெட்டில் இருந்து விலகப் போவதில்லை. நன்கு ஆலோசித்த பின் தான் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இதனை மக்களுக்கு பணியாற்ற கிடைத்த பொன்னான வாய்ப்பாக கருதுகிறேன்,''என்றார்.
ஜெயசூர்யாவோடு சேர்ந்து முன்பு கிரிக்கெட் விளையாடிய முன்னாள் வீரர் ரணதுங்கா சமீபத்தில் தான் ராஜபக்சே பக்கம் இருந்து விலகி, சரத் பொன்சோ தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தார். இதையடுத்து பார்லிமென்ட் தேர்தலில் இருவரும் எதிர்த்து பிரசாரம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே தொகுதியில் கூட போட்டியிடலாம். இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் காமனி லோகுகி கூறுகையில்,""இருவரும் போட்டியிட்டால், தோல்வி பயத்தில் ரணதுங்கா ஓடி விடுவார்,''என்றார்.

No comments:

Post a Comment