ஒரு நாட்டின் தரம், அந்த நாட்டில் உள்ள கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையாலும், பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை பொறுத்தும் தான் உள்ளது என, வரலாற்று ஆசிரியர் மிர்தியால் கூறினார். உலகில் அதிக படிப்பறிவு உள்ள நாடு ஐஸ்லாந்து ஆகும். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை விட ஐஸ்லாந்து கல்வியறிவில் முன்னணியில் உள்ளது. ஐஸ்லாந்தில் கல்வியறிவு 100 சதவீதமாகும். ஐஸ்லாந்தில், பள்ளிக்கல்வியறிவு நம்நாட்டைப் போல, 3 வயதிலேயே துவங்குவது இல்லை. 6 வயதில் தான் துவங்குகிறது. 6 முதல் 16 வயது வரையிலான பள்ளிக்கல்வி, ஐஸ்லாந்தில் கட்டாயமாகும். ஒவ்வொரு ஐஸ்லாந்துக்காரரும், பள்ளியில் கட்டாயம் படித்திருக்க வேண்டும். குறைந்தது மூன்று மொழிகளாவது பேசத் தெரிந்து இருக்க வேண்டும். இதுவே வேலைவாய்ப்பு பெற அடிப்படைத்தகுதியாகும். 100 சதவீத சிறப்பான கல்வியறிவுக்கு ஏற்ப, ஐஸ்லாந்தின் பெண்களின் நிலையும் மிகவும் திருப்திகரமாக உள்ளது.
No comments:
Post a Comment