Monday, February 8, 2010

சூரிய ஒளியில் “சார்ஜ்” ஆகும் பேட்டரி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதற்கு மின்சாரம் தேவை. இனி பேட்டரிகளுக்கு மின்சாரம் தேவைப்படாது. சூரிய ஒளியில் வைத்தாலே பேட்டரிகள் தானாக “சார்ஜ்” ஆகிவிடும்.
இந்த கருவியை அமெரிக்கா பென்சில் வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
மனிதனின் மூளை செயல்பாட்டை மையமாக வைத்து
 இந்த கருவியை உருவாக்கி உள்ளனர். மனித
 மூளை மின்சாரத்தை
 உற்பத்தி செய்கிறது. மனிதன் சூரிய ஒளியில்
 நிற்கும்போது மூளையில் 
மின் உற்பத்தி செய்யும் பகுதி
 தானாக “சார்ஜ்” ஆகிவிடும்.
இதே முறையில்தான் இந்த கருவியையும் 
கண்டுபிடித்து உள்ளனர். சூரிய ஒளியில்
 போட்டோ பைலட் சாதனத்தை வைத்து
 அதன் மூலம் பெறும் சூரிய சக்தியை 
கருவிக்குள் அனுப்பி பேட்டரியை சார்ஜ் செய்து விடுகிறது.
இந்த கண்டுபிடிப்பு மூலம் மின் சக்தி
 துறையில் புதிய புரட்சி ஏற்படும் என்று
 விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment