Wednesday, February 10, 2010

சீனா: அரசியல் கட்சியில் சேர்ந்த இளைஞருக்கு சிறை

சீனாவில் தடை செய்யப்பட்ட அரசியல் கட்சியில் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஷென்ஜென் நகரைச் சேர்ந்த மிங்காய் என்ற இளைஞர், சீனாவில் தற்போது நடைமுறையில் உள்ள ஒரு கட்சி ஆட்சி முறை மீது அதிருப்தியுற்றார்.
இந்நிலையில், அவர் அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் சீன ஜனநாயக கட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் சேர்ந்தார்.
ஆனால் இக்கட்சி சீனாவில் தடை செய்யப்பட்டதாகும். இந்நிலையில் ஷென்ஜென், அக்கட்சியில் சேர்ந்தது குறித்து தெரியவந்ததையடுத்து, அவரை அரசு கைது செய்தது.
இது தொடர்பான வழக்கில் ஷென்ஜெனுக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் வாங், அயல்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
சீனாவில் மக்களுக்கு மனித உரிமைகளே இல்லை என்றும் அப்போது அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment