சென்னை, பிப்.6: 2009 டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1
தேர்வின் பணிநியமன இறுதிப் பட்டியலில்,
மனிதநேய அறக்கட்டளையில் படித்த 63 பேர்
தேர்ச்சிப் பெற்று பணியிடங்களைப் பிடித்துள்ளனர்.
சைதை துரைசாமி நடத்தும் இந்த மையத்தில்
மாணவ-மாணவியருக்கு இலவசமாகப் பயிற்சி
அளிக்கப்படுகிறது.மொத்தம் 82 காலிப் பணியிடங்களுக்கு
நடந்த இத்தேர்வில், இந்த மையம் மூலம் பயிற்சி பெற்ற 63 பேர் தேறியுள்ளனர்.இந்த மையத்தில் படித்த 5 பேர் முதல்
ஐந்து இடங்களைப் பிடித்துள்ளனர்.
முதல் மதிப்பெண் செங்கோட்டையன் (527),
2-வது மதிப்பெண் சாந்தி (526.5), 3-வது மதிப்பெண்
ஆனந்தகுமார் (522),
4-ம் மதிப்பெண் மணிகண்டன் (521), 5-ம் மதிப்பெண் லதா (516.5)
என முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்றவர்களில் துணை ஆட்சியர் பதவிக்கு
11 பேரும், ஊரக வளர்ச்சித் துறையின்
துணை இயக்குநர் பதவிக்கு 24 பேரும்,
கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் பதவிக்கு 18 பேரும்,
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு
10 பேரும் தேர்வாகி உள்ளனர்.இத்தகவலை
மையத்தின் பயிற்சி
இயக்குநர் மா.வாவூசி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment