வத்திராயிருப்பு :வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா, கின்னஸ் சாதனைக்காக ஐந்து வகை கம்ப்யூட்டர் சாப்ட்வேர், 8 வகையான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார்.வத்திராயிருப்பில் உள்ள லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார் டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன் ஆட்டொ மொபைல் கடை வைத்துள்ளார். தாயார் ஆக்னெலின் ஆசிரியையாக பணிபுரிகின்றனர்.
மகனின் கம்ப்யூட்டர் ஆர்வத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கோர்சில் சேர்த்து விட்டனர். இரண்டு ஆண்டுகளில் சி. பிளஸ், விசுவல் பேசிக் என கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் "லாங்வேஜ்' வரை அனைத்தையும் கற்றுக்கொண்டார். மேலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்களும் வேண்டிய லேப்டாப், பிரத்யேக சாப்ட்வேர் என அனைத்தையும் வாங்கி கொடுத்தனர். டெனித் ஆதித்யா தனக்கென ஒரு சாப்ட்வேரை உருவாக்கினார். அதன்மூலம் மேலும் 5 புதிய சாப்ட்வேரையும், ஞாபகசக்தியை வளர்க்கும்படியான 8 புதிய விளையாட்டுக்களையும் உருவாக்கினார். பின்னர் கின்னஸ் சாதனைக்காக 7 மாதத்திற்கு முன் விண்ணப்பித்தார். தனது சாப்ட்வேர் பற்றி விளக்கமாக தெரிவித்தையடுத்து அதை கின்னஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது. நேற்று வத்திராயிருப்பில் தான் படிக்கும் பள்ளியில் தனது கின்னஸ் சாதனையை கம்ப்யூட்டரில் செய்து விளக்கினார்.
இதுகுறித்து டெனித் ஆதித்யா கூறியதாவது:மொத்தமுள்ள 5 சாப்ட்வேரில் 4 சாப்ட்வேர் மாணவர்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கினேன். அவர்களுக்கு கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவை மேம்படுத்த "அலர்ட்' மற்றும் செக்யூரிட்டி, மறைக்கும் (ஹைட்) வசதிகளுடன் அமைத்துள்ளேன். இது தவிர 8 விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளேன். இது மற்ற வீடியோ கேம்களைப்போல பள்ளி மாணவர்களின் ஞாபகசக்தியை வளர்க்கும் விதத்தில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ள "இமாஜின்' விளையாட்டுகளாகும். கின்னஸ் அமைப்பின் முதல் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டேன். அடுத்த தேர்விலும் வெற்றிபெற்று கின்னசில் இடம்பிடிப்பேன், என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment