Wednesday, February 10, 2010

ஐ.ஏ.எஸ்.​ தம்பதி லாக்கரில் ரூ.35 லட்சம் வைர நகை

போபால்,​​ பிப்.​ 9:​ மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ஐ.ஏ.எஸ்.​ தம்பதி அரவிந்த் ஜோஷி,​​ டினு ஜோஷி,​​ அரவிந்த் ஜோஷி தந்தை ஹெச்.எம்.ஜோஷியின் வங்கி லாக்கர்களில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பு தங்க,​​ வைர நகைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.வங்கி லாக்கர்களில் சோதனையிடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.​ அவர்களது அதிகாரப்பூர்வ வீட்டிலிருந்து ரூ.3.04 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.250 போலி வங்கிக் கணக்குகள்:​​ இதேபோல,​​ சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் விவசாயத் துறை செயலர் பி.எல்.அகர்வால் மற்றும் சிலருக்கு ​ தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.​ கரோரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாமலே 250 வங்கிக் கணக்குகள் கிராமத்தினர் பெயர்களில் அகர்வாலின் தணிக்கையாளர்களால் துவங்கப்பட்டுள்ளன.​ இந்த வங்கிக் கணக்குகளில் போடப்பட்டிருந்த ரூ.40 கோடியையும் வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment