83 வயதில் 3 பதக்கம் வென்ற கடலூர் பரமசிவம்
கடலூர், பிப். 9: கடலூரைச் சேர்ந்த 83 வயது முதியவர் பரமசிவம், உலக முதியோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 3 பதக்கங்களை வென்றுள்ளார்.கடலூர் அண்ணா நகரில் வசிப்பவர் ஏ.பரமசிவம். (படம்) புணேயில் ஜனவரி 22 முதல் 6 நாள்கள் நடந்த உலக முதியோர் விளையாட்டுப் போட்டியில் இவர் கலந்து கொண்டார்.இந்திய முதியோர் விளையாட்டுச் சங்கம் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தது.இப்போட்டியில் பரமசிவம் 5 ஆயிரம் மீட்டர் நடைப் போட்டியில் முதலாவதாக வந்து, தங்கப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3-வதாக வந்து வெண்கலப் பதக்கத்தையும் பரமசிவம் வென்றார். பரமசிவம் ஏற்கெனவே பல ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றவர். 1965-ம் ஆண்டு வரை அவர் 15 ஆண்டுகள் கப்பலில் பணிபுரிந்தார். அந்தப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், 1998 முதல் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு தொடர்ந்து வெற்றி வாகை சூடிவருகிறார்.பரமசிவத்துக்கு மனைவி சந்திரா (74), 4 மகன்கள், 5 மகள்கள், 22 பேரக் குழந்தைகள் உள்ளனர். கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் செயல்படும் நடைப் பயிற்சியாளர் சங்கச் செயலாளராகவும் அவர் இருந்து வருகிறார்.
No comments:
Post a Comment