வெல்லிங்டன்: இந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகளை கடந்து விட்டாலும் அவரை கொன்ற கொலையாளிகளுக்கு நியூஸிலாந்து சீக்கிய கோயிலில் கவுரவம் வழங்கப்படுவது இங்கு வாழும் ஏனைய இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.இது தொடர்பான விஷயத்தை வீக்எண்ட் ஹெரால்டு என்ற பிரபல பத்திரிகை இந்த பிரசுரம் செய்துள்ளது.
இந்தியாவின் பிரதமராக இருந்து வந்த இந்திரா 1984 ம் ஆண்டில் அவரது பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலம்மிக்க தைரியம் மிகுந்த துணிச்சல்காரர் என பெயர் எடுத்த இந்திராவின் இழப்பு இந்திய அரசியலில் , காங்கிரசில் பெரும் வெற்றிடமாக கருதப்பட்டது.
இந்திரா கொலையுண்ட தருணத்தில் சத்வந்த்சிங், பீந்த்சிங், கேஹர் சிங் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே மற்ற பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டனர். கேஹர்சிங் மரணத்தண்டனை பெற்றார். இந்த சம்பவம் நடந்து 24 ஆண்டுகளை கடந்து விட்டது.கொலையாளிகள் சீக்கியர்கள் என்பதால் இவரது கொலையை தொடர்ந்து டில்லி, பஞ்சாபில் பெரும் கலவரம் வெடித்தது. பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நியூஸிலாந்து மானுக்காவ் என்ற பகுதியில் சீக்கியர்களின் மிகப்பெரிய கோயில் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்வர். இந்த கோயிலின் உட்புறச்வரில் கொலையாளிகள் 3 பேர் உருவப்படம் தொங்க விடப்பட்டுள்ளது. இதில் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட தியாகிகளை நினைவு கூறும் சகீத்பாய் என்ற தத்துவத்தின்படி கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இங்குள்ள நியூஸிலாந்து இந்தியன் சென்ட்ரல் அகோஷிசேஷன் அமைப்பின் பொதுசெயலர் வீர்கார் என்பவர் கூறுகையில் ; பயங்கரவாதத்தில் ஈடுபட்டோருக்கு மதிப்பு அளிப்பது என்பது அவரவர் தனி விருப்பம். அதே நேரத்தில் அவர்களை கவுரவிக்கிறோம் என்ற பெயரில் பொது இடத்தை பயன்படுத்துவது தேவையற்றது. இது வேண்டாத வேதனையையும், டென்ஷனையும் ஏற்படுத்தும். பிற இந்தியர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொற்கோவிலில் நடந்த சம்பவம் மறக்க முடியுமா ? இது தொடர்பாக கோயிலை நிர்வகித்து வரும் சீக்கியர் ரன் வீர் லாலி சிங் கூறுகையில் ; எங்கள் மதத்தை பொறுத்த வரையில் யார் இறந்தாலும் அவர்கள் தங்களின் நினைவு கூறத்தக்கவர்கள். இந்திராவை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்று நாங்கள் சொல்ல முடியாது.அவர்களும் எங்களுடைய நினைவில் நின்றவர்கள்தான். பஞ்சாபில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்திய இந்திராவை அவர்கள் பழிவாங்கியுள்ளனர். இதனால் அவர்களை நாங்கள் நினைவில் வைத்து போற்றுகிறோம் இதில் தவறு ஏதும் இல்லை என்றார் கூலாக.
இது குறித்து நியூஸிலாந்துக்கான இந்திய தூதர் சுரேஷ் மேத்தாவின் அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் , இந்த விஷயம் உண்மைதான் என ஒத்துக்கொண்டார். மேலும் இது சென்சிடிவ் விஷயம் என்று கூறி தொடர்ந்து பேச மறுத்து விட்டார்.
நியூஸிலாந்து கோயிலில் இந்திரா கொலையாளிகள் உருவப்படம் மொத்தத்தில் இந்தியர்களின் மனதை புண்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment