வேடசந்தூர்: போதிய ஆசிரியர்கள் இல்லாததால் ஒன்றிய தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அரசு சமச்சீர் கல்வி முறையை புகுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்,ஆசிரியர் விகிதாச்சாரத்தின் படி ஆசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியின் தரம் தாழ்ந்துள் ளதால் மக்கள் கிராமங்களில் கூட தனியார் பள்ளிகளை நாடும் நிலை எழுந் துள்ளது. வேடசந்தூர் ஒன்றியத்தில் தொடக்க பள்ளிகள் 70, நடுநிலைப் பள்ளிகள் 19,அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் 13 , நடுநிலைப்பள்ளி இரண்டு உள்ளன.அரசு தொடக்க பள்ளிகளில் 70 தலைமை ஆசிரியர்களும்,உதவி ஆசிரியர்கள் 91 பேர் பணியாற்றுகின்றனர். நடுநிலைப்பள்ளிகளில் 19 தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் 40 பேர்,இடை நிலை ஆசிரியர்கள் 76 பேர்,தொழில் ஆசிரியர்கள் ஏழு பேர் பணியாற்றுகின்றனர்.தொடக்க பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறுகிறது.
நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறும்.இதில் ராஜகோபாலபுரம், ஆர்.எச்.காலனி, காசிபாளையம் உட்பட 10 பள்ளிகளில் மட்டுமே மூன்று ஆசிரியர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். பிற பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஒருவரும், உதவி ஆசிரியர் ஒருவர் என இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்கின்றனர். அரசு பள்ளியில் 101 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மூன்று ஆசிரியர்களும்,141 மாணவர்களுக்கு மேல் இருந்தால் ஐந்து ஆசிரியர்களும் நியமிக்கலாம் என விதி உள்ளது.
இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் விடுமுறை எடுத்தாலும், அலுவல் காரணமாக வெளியே சென்றாலும் ஒரு ஆசிரியரே ஐந்து வகுப்பையும் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. தினசரி ஒரு ஆசிரியர் இரண்டு, மூன்று வகுப்புக்களை கவனிக்க வேண்டிய நிலையில் மாணவர்களின் கல்வித்தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று பெற் றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தனியார் பள்ளிகளில் இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமித்து பாடம் கற்றுத்தரும் நிலையில் அரசு பள்ளிகளில் இரண்டு வகுப்பை ஒரு ஆசிரியர் கவனிப்பதால் கிராம புற மக்கள் கூட தங்களது குழந்தைகளை நகர் புற தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. போதிய ஆசிரியர்களை நியமிக்காமல் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தாலும் கல்வித்தரம் உயராது என்பதே பெற்றோர்களின் கருத்தாகும்.

No comments:
Post a Comment