ஆஸ்திரேலியாவில் இனவெறி கிடையாது: பிரெட் லீ
மெல்போர்ன், பிப்.8: ஆஸ்திரேலியாவில் இனவெறி கிடையாது என்று அந்நாட்டு வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பிரெட் லீ கூறியுள்ளது:சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் விளையாடும் எண்ணம் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இதுவரை நான் விளையாடியதே மிகவும் திருப்தி அளித்துள்ளது. நாங்களே தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆஸ்திரேலிய அணியில் புதிதாக சேர்ந்துள்ள அனைத்து வீரர்களுமே திறமையானவர்கள்தான். அவர்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். இந்திய மக்களுக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவைப் பற்றி நல்ல எண்ணம் உண்டு. ஆனால் இப்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத சம்பவங்களால் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் யாருக்கும் இனவெறி கிடையாது. இங்கு பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்.இந்தியப் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் ஆஸ்திரேலியா பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தி விட்டார்கள். நான் இந்தியா செல்லும் போது இது குறித்து அவர்களிடம் விளக்குவேன் என்றார் லீ.
No comments:
Post a Comment