Wednesday, February 10, 2010

கேப்டனை மாற்றமாட்டோம்:​ ஹாக்கி சம்மேளனம் அறிவிப்பு


புது தில்லி,​​ பிப்.9:​ இந்திய ஹாக்கி அணியின் கேப்டனை மாற்றமாட்டோம் என்று ஹாக்கி சம்மேளனம் ​(எச்.ஐ)​ அறிவித்துள்ளது.தில்லியில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.​ இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.​ அணியின் கேப்டனாக ராஜ்பால் சிங் தேர்வு செ ய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் ராஜ்பால் சிங்கை மாற்றிவிட்டு,​​ பிரப்ஜோத் சிங் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பரவலாக செய்திகள் வெளியாயின.​ இதை ஹாக்கி சம்மேளனம் மறுத்துள்ளது.இதுகுறித்து சம்மேளனப் பொதுச் செயலர் நரீந்தர் பத்ரா கூறியதாவது:​ இந்திய ஹாக்கிஅணியின் கேப்டனையோ,​​ அணி வீரர்களையோ மாற்றும் திட்டம் சம்மேளனத்திடம் இல்லை.ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி இந்திய அணி,​​ உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும்.கேப்டனை மாற்றும்படி அணி நிர்வாகத்திடமிருந்து,​​ சம்மேளனத்துக்கு எந்தக் கடிதமும் இதுவரை வரவில்லை.​ ராஜ்பால் சிங்தான் கேப்டன் என்று தேர்வுக் குழு எடுத்துள்ள முடிவே இறுதியானது.​ இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.

No comments:

Post a Comment