Wednesday, February 3, 2010

தவறுகளைத் தட்டிக்கேளுங்கள்

பொன்னமாரவதி, பிப்.​ 2: ​ ​ தவறுகளைத் தட்டிக்கேளுங்கள் என்று நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆ.​ அழகிரிசாமி குறிப்பிட்டார்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிமக்கள் நுகர்வோர் மன்றத் தொடக்க விழாவில்,​​ மன்றத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

""நுகர்வோரின் உரிமைகள்,கடமைகள் குறித்து நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம்;​ குறிப்பாக மாணவர்கள் தெரிந்துகொள்ளவகது மிக அவசியமானதாகும்.

ஏனெனில்,​​ படிக்கும் இளைஞர்களால்தான் இத்தகையச் செய்திகளை ​ விரைவில் பிறருக்குச் கொண்டு சேர்க்க முடியும்.​ மேலும்,​​ இன்று படித்தவர்கள்தான் பல்வேறு துறைகளில்,​​ பல்வேறு ​ நிலைகளில் தவறுகளைச் செய்கின்றனர்.​ படிக்காதவர்கள் சமூகத்தில் உள்ள தவறுகளையும் செயல்களையும் தட்டிக்கேட்டுக்கொண்டிருக்க,​​ படித்தவர்களோ சுட்டிக்காட்டக்கூடத் தயங்குகின்றனர்.​ ​

ஆனால்,​​ எந்தச் சமூகத்தில் தவறுகளும் அவலங்களும் சுட்டிக்காட்டப்பட்டு,​​ தட்டிக்கேட்கப்படுகின்றனவோ அந்தச் சமூகம்தான் முன்னேறும்.​

ஆகையால், ​​ படிக்கும் மாணவர்களிடம் நுகர்வோர் விழிப்புணர்வு அவசியம்.​ மாணவர்கள் தம் கடமைகளையும் உரிமைகளையும் தெரிந்துகொள்வதோடு,​​ சமூகத் தவறுகளைத் தட்டிக்கேட்பவர்களாகவும் உருவாக வேண்டும்'' என்றார் அழகிரிசாமி.

விழாவுக்கு,​​ கல்லூரி முதல்வர் தா.​ மணி தலைமை வகித்தார்.​ பேராசிரியர்கள் எம்.​ முஹம்மது இப்பாரகிம் மூசா,​​ நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.​ சத்தியமூர்த்தி,​​ இராம.​ மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ மாவட்ட நுகர்வோர் குழுச் செயலர் சு.​ தனவேல்,மாவட்ட நுகர்வோர் குழுத் துணைத் தலைவர் இரா.உ.​ ராமன்,​​ மாவட்ட நுகர்வோர் குழு மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் லதா உத்தமன் ஆகியோர்கள் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக,​​ நுகர்வோர் மன்றப் பொறுப்பாளர் ​ வே.அ.​ பழனியப்பன் வரவேற்றார்.​ நிறைவில்,​​ மன்றச் செயலர் எம்.​ சதீஷ்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment