ஆந்திராவில் தொழில் போட்டிக்காரணமாக உறவினரின் மகளை கொன்று பாய்லரில் போட்டு எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மகள் கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட தந்தையும் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.
விஜயவாடாவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி வெங்கடேசுவரம்மா. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். 2-வது மனைவிக்கு நாக வைஷ்ணவி (10), சாய் (14) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். முதல் மனைவியின் மகனையும் இவர் படிக்க வைத்து பராமரித்து வந்தார். கடந்த 30-ந்தேதி நாக வைஷ்ணவியும், அண்ணன் சாயியும் காரில் பள்ளிக்கு சென்றனர். சிறிது தூரம் போனதும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கார் மீது கல்வீசி நிறுத்தினர். டிரைவர் இறங்கியதும் அவரை கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அதே காரில் அண்ணன்- தங்கை இருவரையும் கடத்திச் சென்றனர். அதன்பிறகு இருவரையும் வேறு காருக்கு மாற்றினார்கள். அப்போது சிறுவன் சாய் தப்பிவிட்டான். சிறுமியை ஒருநாள் முழுவதும் காரில் வைத்துக்கொண்டே ஊரைச் சுற்றினர். நேற்று அவளை குண்டூர் கொண்டு சென்றனர். அங்கு ஆட்டோநகரில் உள்ள இரும்பு பாய்லர் தொழிற்சாலையில் வைத்து சிறுமியை கொலை செய்து பாய்லரில் போட்டு எரித்து விட்டனர். மகள் கடத்தல் பற்றி பிரபாகரன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரபாகரனின் முதல் மனைவியின் தம்பி வெங்கட்ராவ் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சிறுமியை கடத்தி கொலை செய்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்டதும் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். தாயாரும் மயக்கம் அடைந்து இருக்கிறார். பிரபாகரன் செல்வ செழிப்புமிக்கவர். சாராய வியாபாரம் செய்து வந்தார். அவர் முதல் மனைவியை ஒதுக்கி வைத்ததாலும் சாராய விற்பனையில் போட்டியாளராக இருந்ததாலும் பழிவாங்க வெங்கட்ராம் திட்டமிட்டார். மகள் நாகவைஷ்ணவி பிறந்த பின்புதான் அவருக்கு யோகம் அடித்ததாக நம்பினார். இதனால் சிறுவனை விட்டுவிட்டு நாகவைஷ்ணவியை மட்டும் கடத்தி கொலை செய்துள்ளனர். இதற்காக ரூ.50 லட்சம் பேரம் பேசி கூலிப்படையை ஏவி இந்த கொடூர செயலில் வெங்கட்ராவ் இறங்கினார். போலீசார் கூலிப்படையினரை தேடிவருகிறார்கள். ஏற்கனவே ஒருமுறை சிறுமி நாகவைஷ்ணவி கடத்தப்பட்டார். அப்போது தந்தை பணத்தை கொடுத்து மகளை உயிருடன் மீட்டுவிட்டார். அதேபோல் இப்போதும் பணம் கொடுத்து மீட்க தயார் என்று விளம்பரம் செய்து இருந்தார். ஒருகோடி ரூபாய் கூட கொடுக்க தயாராக இருந்தார். ஆனால் அதற்குள் சிறுமியை கொலை செய்துவிட்டனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் தந்தை இறந்ததற்கு முதல்- மந்திரி ரோசையா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு ஆகியோர் இரங்கல்
No comments:
Post a Comment