Saturday, February 13, 2010

சூரியனை ஆராய சென்றது எஸ்.டி.ஓ., விண்கலம்



வாஷிங்டன் : சூரியனைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், விண்கலம் ஒன்றை செலுத்தியுள்ளது. சூரியனைப் பற்றியும், அங்கு ஏற்படும் காந்தப் புயல் பற்றியும், அதன் ஒளிவட்டம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நேற்று முன்தினம் அட்லஸ்-5 ராக்கெட் மூலம் சோலார் டயனமிக் அப்சர்வேட்டரி (எஸ்.டி.ஓ.,) என்ற விண்கலத்தை, புளோரிடா மாகாணத்தின் அட்லாண்டிக் கடற்கரை பகுதியிலிருந்து விண்ணில் செலுத்தியது.
இந்த எஸ்.டி.ஓ., விண்கலம் ஐந்தாண்டு காலம் சூரியனின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அது குறித்த படங்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும். இந்த ஆய்வினால், பூமியில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள் குறித்தும் அறிய முடியும். சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புயலால் விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களும், விண்கலங்களும் பாதிக்கப்படுகின்றன. எஸ்.டி.ஓ., மேற்கொள்ளும் ஆய்வின் மூலம் இந்த பாதிப்புகளை தடுக்கவும் வழி பிறக்கும்.

No comments:

Post a Comment