டோக்கியோ, பிப்.7: ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு சிறிய தீவுகளில் பலத்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது. இதனால் வீடுகள் அதிர்ந்தன. தைவானில் இருந்து 160 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் கடலோரப் பகுதியான மியாகோஜிமாவில் உள்ளூர் நேரப்படி மாலை 3.10 மணிக்கு 6.4 ரிக்டர் முதல் 6.6 ரிக்டர் அளவிலான பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் பல சிறிய தீவுகளில் வீடுகள் குலுங்கின. தைவானில் உள்ள தைபே நகரிலும் இதன் தாக்கம் இருந்தது. அங்கிருந்த கட்டடங்களும் அதிர்ந்தன. நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் எச்சரிக்கை தளர்த்தப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை. உலகில் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் நாடாக ஜப்பான் உள்ளது. இங்குள்ள கோபே நகரில் கடந்த 1995-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6,400 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment