Friday, February 12, 2010

நெல்லை கலெக்டர் திடீர் ரோந்து: தாமத ஊழியர்களுக்கு 'ஆப்சென்ட்'

திருநெல்வேலி:நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிக்கு தாமதமாக வந்த ஊழியர்களுக்கு ரோந்து வந்த கலெக்டர் "ஆப்சென்ட்' போட உத்தரவிட்டார்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. நேற்று காலையில் அலுவலகம் வந்த கலெக்டர் ஜெயராமன், 10.20 மணிக்கு கட்டடத்தின் மூன்று தளங்களிலும் நடந்துசென்று பார்வையிட்டார். பல அலுவலகங்களில் ஒன்றிரண்டு பணியாளர்களை தவிர யாரும் வராமல் இருந்தனர். ஒரு அலுவலகத்தில் அதிகாரிக்கு பதிலாக இளைஞர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவரிடம் கலெக்டர் விசாரித்தபோது, ஒரு அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு அவர்தான் பணிச்சுமை காரணமாக தம்மை நியமித்திருப்பதாகவும், சொந்த பணத்தில் சம்பளம் தருவதாகவும் கூறினார். ஆனால், அந்த அதிகாரி பணிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது. எனவே நேற்று காலையில் 10.20 மணி வரையிலும் பணிக்கு வராமல் இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் "ஆப்சென்ட்' போடுமாறும், அதிகாரிகள் தாங்களாகவே சம்பளத்திற்கு ஆள் நியமனம் செய்யக்கூடாது எனவும் கூறிவிட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment