கொழும்பு, பிப்.10- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழ் இந்தியாவிடம் இதுவரை அளிக்கப்படவில்லை என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த மே மாதம் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ளதால் அவரது மரணச் சான்றிதழை அளிக்குமாறு வெளியுறவுத்துறை மூலம் சிபிஐ இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டது.
இதனிடையே பிரபாகரன் மரணச் சான்றிதழ் இந்தியாவிடம் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை இலங்கை அரசு அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்தனர் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரபாகரனின் மரணச் சான்றிதழ் எதுவும் சிபிஐ.,யிடம் அளிக்கப்படவில்லை என்று சிபிஐ இயக்குநரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment