Monday, February 8, 2010
அரசியல் யுத்தத்தை எதிர்கொள்ள தயார்!: சரத் பொன்சேகா
கொழும்பு, பிப்.8: எனக்கு எதிரான அரசியல் யுத்தத்தை சந்திக்க தயாராக உள்ளதாக இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். அண்மையில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள நன்றி அறிவிப்பு வாசகத்தில் இவை இடம்பெற்றுள்ளன. மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: என் மீதான அரசியல் யுத்தம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை போன்றதாகும். புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்திடவில்லை. அதைபோலவே எனக்கு எதிரான அரசியல் யுத்தமும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது என கருதுகிறேன். இத்தகைய யுத்தத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததாலேயே என் மீது நெருக்குதல்கள் தொடர்கின்றன. எனது சகாக்களும், ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்தாலும் இந்த அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சபோவதில்லை. இலங்கையில் ஜனநாயகமும், நீதியும் கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment