குஜராத்தில் உள்ள கோர்ட்களில், அடுத்த ஆண்டுக்குள் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என, அந்த மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் 2004ம் ஆண்டில் 45 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2009ல் இந்த வழக்குகள் 20 லட்சமாக குறைந்து விட்டன. இவ்வாறு வழக்குகள் கோர்ட்டில் குறைவதற்குக் காரணம் குஜராத்தில் உள்ள கோர்ட்களின் வேலை நேரம் 30 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோர்ட்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், வெவ்வேறு பணிகளில் உள்ளவர்கள், கோர்ட் வழக்குகளில் ஆஜராகும் நிலையில், அவர்கள் ஆஜராவதற்கு வசதியாக, மாலை நேர கோர்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கோர்ட்களின் விடுமுறை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. மீடியேஷன் எனப்படும் சிக்கல் தீர்வு முறைகளும், கோர்ட்டில் பின்பற்றப்படுகின்றன. இதனால் வழக்குகளில் தீர்ப்பு என்பதை விட, சமரச முடிவுகள் என்ற நிலை எட்டப்படுகிறது.
No comments:
Post a Comment