தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களின் செயல்பாடு தொடர்பாகவும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி 17-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சிறப்புக் கூட்டத்தினை நடத்த உள்ளார்.
இக்கூட்டத்தில் பல்வேறு குழுக்களின் தலைவர்களும், அலுவல்சார் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு தங்களின் குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment